Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி,
1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி மாலை 5:20 வரை,
அதன்பின் துவாதசி திதி, விசாகம் நட்சத்திரம் நள்ளிரவு 2:48 வரை,
அதன் பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : அசுவினி
* பொது: ஏகாதசி விரதம்

 

மேஷம்: எதிலும் அலட்சியப்போக்கு வேண்டாம். அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.

ரிஷபம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய வேலைவாய்ப்பை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைப்பதில் சிறிய அளவில் தாமதம் ஏற்படலாம்.

மிதுனம் : எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். வியாபாரிகள் சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதம் வரக்கூடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

கடகம்: விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் இருந்து நல்ல தகவல் வரும். பெண்கள் நினைத்த விஷயத்தை சாதிப்பர். சுபச் செலவுகள் கூடும்.

சிம்மம் : அலுவலகத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரும். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும். குடும்ப ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: மனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அலுவலகத்தில் எந்தவொரு விஷயத்திலும் புது முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

துலாம் : உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சமூகத்தில் கௌரவம் உயரும். தாமதப்பட்ட பல செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாயின் உடல் நலம் சரியாகும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை பரிசாக பெற்று மகிழ்ச்சி கொள்வர்.

விருச்சிகம்: எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றினால் பல நன்மைகளை பெறலாம். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு சற்று அதிகமாகும்.

தனுசு: மனதில் இருந்த பயம் நீங்கும்படியான சம்பவங்கள் நிகழும். வியாபாரத்தில் இதுவரை இருந்த அலைச்சல் மற்றும் மனஅழுத்தம் குறையும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். உத்யோகத்தில் பாதியில் நின்ற வேலைகள் முடியும்.

மகரம்: காதல் விஷயத்தில் விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இருந்த முடக்கம் நீங்குவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். கடுமையான முயற்சியால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும். வியாபாரத்தில் இழப்புகள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதபடி வளைந்து கொடுப்பீர்கள். பொழுது போக்கு அம்சங்கள் மகிழ்ச்சி தரும்.

மீனம்: தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டுதல் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே கிடைக்கும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 04/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 20ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 4.7.2020 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...

%d bloggers like this: