Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை!!

RADIOTAMIZHA | இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை!!

லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் சிக்கிய இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு (Meng Hongwei) சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மற்றும் கடலோர காவல் படை தலைவராக இருந்த இவர் பிரான்சை தலைமையகமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணையில், அவர், தமது பதவியை பயன்படுத்தி கோடி கோடியாக பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் தாம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் டியான்ஜின் நகர நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு பதிமூன்றரை வருட சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பாகுபலி படத்தில் மார்பிங் செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார். ...

%d bloggers like this: