Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இந்தோனேஷிய கடற்கரையைச் சுத்தம் செய்யும் ஸ்பைடர் மேன் குவியும் பாராட்டுக்கள்

RADIOTAMIZHA | இந்தோனேஷிய கடற்கரையைச் சுத்தம் செய்யும் ஸ்பைடர் மேன் குவியும் பாராட்டுக்கள்

இந்­தோ­னே­ஷி­யாவில் ஸ்பைடர் மேன் ஆடை அணிந்து குப்­பை­களை சுத்தம் செய்யும் நபர் சமூக வலைத்­த­ளங்­களில் பிர­ப­ல­மா­கி­யுள்ளார்.இந்­தோ­னே­ஷி­யாவின் சுலா­வேசி மாகா­ணத்தில் உள்ள கடற்­கரை நக­ர­மான பரே­பேரைச் சேர்ந்­தவர் ரூடி ஹர்­டானோ என்­ப­வரே இவ்­வாறு ஸ்பைடர் மேன் வேட­ம­ணிந்த நிலையில் கடற்­க­ரையை சுத்தம் செய்­கிறார்.

இவர் அப்­ப­கு­தியில் உள்ள பிர­பல உண­வ­க­மொன்றில் பணி­யாற்றி வருகிறார்.இயற்கை ஆர்­வ­ல­ரான இவர் ஸ்பைடர் மேன் போல் உடை­ய­ணிந்து அப்பகு­தியில் உள்ள பிளாஸ்டிக் குப்­பை­களைச் சுத்தம் செய்து வரு­கிறார்.

இது அனை­வ­ரையும் சற்றே யோசிக்­கவும், வியக்­கவும் வைத்­தது. இது குறித்து ரூடி ஹர்­டானோ செய்­தி­யா­ளர்­க­ளி­டையே கூறு­கையில், ‘உலகில் அதிக அளவில் குப்பைகளை உரு­வாக்­கு­வதில் இந்­தோ­னே­சியா 4ஆவது இடத்தில் உள்­ள­தாக ஆய்வறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

நமது கவ­னக்­கு­றை­வாலும், அலட்­சி­யத்­தி­னாலும் வீதி­க­ளிலும், கடற்­க­ரை­க­ளிலும் பிளாஸ்டிக் குப்­பைகள் வீசப்­ப­டு­கின்­றன. மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­யாக நானே வீதி­களில் இறங்கி குப்­பை­களைச் சுத்தம் செய்தேன். ஆனால் யாரும் கண்­டு­கொள்­ள­வில்லை.

என்­னுடன் இணைந்து பொதுப்­பணி ஆற்ற யாரும் முன்­வ­ர­வு­மில்லை. இதை­ய­டுத்து ஸ்பைடர் மேன் உடை­ய­ணிந்து குப்­பை­களைச் சுத்தம் செய்யத் துவங்கினேன். தற்போது பொதுமக்கள் இந்த விஷயத்தில் நல்ல ஈடுபாட்டுடன் உள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | பாகுபலி படத்தில் மார்பிங் செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப்

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார். ...

%d bloggers like this: