Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு: 724 பேருக்கு தொற்று

RADIOTAMIZHA | இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு: 724 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் இந்தியர்கள் 677 பேருக்கும், வெளிநாட்டவர்கள் 47 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 67 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதுடன், 640 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்ட்ராவில் 129 பேரும், கேரளத்தில் 127 பேரும் கர்நாடகத்தில் 55 பேரும், குஜராத்தில் 42 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 40 பேரும், ராஜஸ்தானில் 39 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் ...

%d bloggers like this: