Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இதுவரை கொரோனா வைரஸ் கால் பதிக்காத நாடுகள்

RADIOTAMIZHA | இதுவரை கொரோனா வைரஸ் கால் பதிக்காத நாடுகள்

உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் , கொமரூஸ் கிரிபதி, லெசதோ, மலாவி, மாஷல் தீவு, மைக்ரோசியா, நாவுரு, வடகொரியா, பலாவு, சேமோவா, வனவாடு, யேமன், சாஹோ தோமோ, பிரின்சிபே, சொலமன் தீவுகள், தென் சூடான், தாஜிகிஸ்தான், டொங்கா, தர்கிமேனிஸ்தான், துவாலு போன்ற நாடுகளில் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியா தொடர்பான புள்ளிவிபரங்களில் சிக்கல்கள் இருப்பதாக விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

About இனியவன்

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...