Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நலமாக இருப்பதாகத் தகவல்

RADIOTAMIZHA | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நலமாக இருப்பதாகத் தகவல்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் வெண்டிலேட்டர் வைக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரின் செய்தித் தொடர்பாளர், மருத்துவமனையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நிம்மோனியா அறிகுறிகள் ஏதும் அவருக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் வைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...