Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஆடை தொழிற்சாலைகளில் பரிசோதனை

RADIOTAMIZHA | ஆடை தொழிற்சாலைகளில் பரிசோதனை

ஆடை தொழிற்சாலைகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களிடையே வைரஸ் தொற்று பரவாதிருக்கும் வகையில், தொழிற்சாலை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதிக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை (18) முதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

நிறுவனங்களில் பரிசோதனைக்காக வருகைதரும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, நிறுவன தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்போது, சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: