Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்ஸில் நடப்பு சம்பியன் ஓசாக்கா தோல்வி

RADIOTAMIZHA | அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்ஸில் நடப்பு சம்பியன் ஓசாக்கா தோல்வி

வருடத்தின் முதலாவது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்டியான அவுஸ்திரேலய பகிரங்க டென்னிஸ்ஸில் மகளிர் ஒற்றையர் நடப்பு சம்பியனான நயோமி ஒசாக்கா, மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து நடையைக் கட்டினார்.

சீன வீராங்கனை கியாங் வெங்கிடம் செரினா தோல்வி அடைந்த நிலையில் 15 வயது வீராங்கனை கொக்கோ கோவிடம் ஒசாக்காவின் தோல்வியானது அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்ஸில் இடம்பெற்ற மிகப்பெரிய தலைகீழ் முடிவாக இவ் வருடம் கருதப்படுகின்றது.

ரொட் லேவர் அரங்கில் இன்று காலை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஓசாக்காவை ஐக்கிய அமெரிக்காவின் கொகோ கொவிடம் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு நான்காம் சுற்றில் விளையாட தகுதிபெற்றார்.அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றும் வீராங்கனைகளில் கோவ் வயதில் மிகக் குறைந்தவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

இன்றைய போட்டியில் நயோமி ஒசாக்காவிடமிருந்து பெரிய அளவில் சவாலை எதிர்கொள்ளாத கொக்கோ கோவ் 6 – 3, 6 – 4 என்ற புள்ளிகள் கணக்கில் மிக இலகுவாக இரண்டு செட்களிலும் வெற்றியீட்டினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சர்வதேச கிங்பொக்சிங்சில் சாதனை படைத்த வவு­னி­யா மாண­வர்­கள்

பாகிஸ்தான், லாகூர் பஞ்சாப் பல்­க­லைக்­க­ழக உள்­ளக அரங்கில் நடை­பெற்ற பாகிஸ்தான் இலங்கை சவேட் கிங்­பொக்சிங் பகி­ரங்க சர்­வ­தேச போட்­டியில் இலங்­கைக்கு ...

%d bloggers like this: