Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | அறிகுறி காட்டாமல் உடலுக்குள் மறைந்திருக்கும் கொரோனா:மருத்துவர்கள் அதிர்ச்சி

RADIOTAMIZHA | அறிகுறி காட்டாமல் உடலுக்குள் மறைந்திருக்கும் கொரோனா:மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த 14 நாட்களுக்கு அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்படும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் டில்லியிலிருந்து கேரளா திரும்பிய, 19 வயது மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாட்களில் எந்த வைரஸ் அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. இது, ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கேரளாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:கேரளா வந்த 19 வயது மாணவி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் அவரிடம் வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதன்பின் தான் அவர், டில்லியில் தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற நிஜாமுதீன் பகுதியிலிருந்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு கொரோனா இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தோம். அப்படி நடந்த சோதனையில்தான் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப் பட்டிருந்த 14 நாட்களில் கொரோனா அறிகுறி ஏதுமின்றி இருந்த மாணவிக்கு, வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதால், அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய, மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து ...