Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்து:7 பேர் பலி

RADIOTAMIZHA | அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்து:7 பேர் பலி

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். அலாஸ்கா மாகாணம் ஆன்கரேஜ் (Anchorage ) பகுதியிலுள்ள சோல்டாட்னா (Soldotna) விமான நிலையம் அருகே 2 விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒரு விமானத்தில் இருந்த அலாஸ்கா மாகாண சட்டப்பேரவை கீழவை உறுப்பினரான (Alaska House of Representatives) குடியரசு கட்சியை சேர்ந்த கேரி க்னோப் (Gary Knopp) பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றோர் விமானத்தில் பயணித்த தெற்கு கரோலினாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு (National Transportation Safety Board) அமைப்பு, அமெரிக்க பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜப்பான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

தேர்தல் வெற்றிக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக அவர் இந்த வாழ்த்தினைத் ...