Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாறி உள்ளது. உயிரிழப்பின் அடிப்படையில் இத்தாலி முன்னணியில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.

ஒரேநாளில் கிட்டத்தட்ட 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதால் அந்த நாட்டில் இதுவரை 2 லட்சத்து14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆயிரத்து 41 பேர் ஒரே நாளில் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 100ஐ எட்டியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸின் தீவிரம், நோய்கள் குறித்த தனது பார்வையை மாற்றியதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதற்காக நாடு முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டும் என ஒருபோதும் உத்தரவிடமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனிடையே அரிசோனா மாநிலத்தில் உள்ள கிரேட் கன்யான் தேசியப் பூங்காவை மூடுமாறு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். கொலராடோ மாகாணத்தில் உள்ள சீனத் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வழங்க வேண்டும் என அம்மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து பரவி வரும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யாவில் இருந்து ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில நாட்களில் கப்பல் அமெரிக்காவுக்கு வந்து சேரும் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் கொரோனாவின் தாக்குதலுக்கு 2வதாக பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. கனெக்டிகட் மாகாணத்தில் 6 வாரமேயான சிசு உயிரிழந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...