Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை மதிக்கத் தவறினால் சுட்டுக் கொல்ல உத்தரவு

RADIOTAMIZHA | அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை மதிக்கத் தவறினால் சுட்டுக் கொல்ல உத்தரவு

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க அமுல்படுத்தப்பட்ட சட்டத்தை எவராவது மதிக்கத் தவறினால் அவர்களை சுட்டுக் கொல்லுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிலிப்பைன்ஸின் லூசோன் தீவுப்பகுதி கடந்த ஒருமாதகாலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

“இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இந்த நேரத்தில் அரசாங்கத்தைப் பின்பற்றுங்கள், ஏனென்றால் எங்களுக்கு ஒழுங்கு இருப்பது மிகவும் முக்கியமானது, “என அவர் புதன்கிழமை இரவு தேசிய தொலைக்காட்சி யில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் தொடங்கியதிலிருந்து தங்களுக்கு எந்த உணவுப் பொதிகளும் பிற நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை என கூறி.மணிலாவின் கியூசன் நகரத்தில் ஒரு சேரியில் வசிப்பவர்கள் தங்களது குடிசை வீடுகளுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் போராட்டமொன்றை நடத்திய பின்னர், டூர்ட்டேவின் எச்சரிக்கை வந்துள்ளது.

“மேலும் சுகாதார ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள்… ஏனென்றால் அது ஒரு கடுமையான குற்றம். யாராவது சிக்கலை உருவாக்கினால், படையினரின் உயிருக்கு ஆபத்து இருந்தால்: அவர்களை சுட்டுக் கொல்லுங்கள். ”என காவல்துறையினருக்கும் இராணுவத்துக்கும் உத்தரவிட்டுள்ளேன் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...