Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை தொடர்பான விபரங்கள்

RADIOTAMIZHA | அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை தொடர்பான விபரங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன தொற்று நோய் காரணமாக வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதிகூடிய விலையேற்றத்தை தடுக்க வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இது தொடர்பில் அந்தந்த மாவட்ட செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் பிரகாரம் 5 மாவட்டத்திற்கும்,

ஒரு லட்சத்து 55 ஆயிரம் கிலோ சீனி 117 ரூபா விலையிலும் ,

ஒரு லட்சம் கிலோ வெங்காயம் 160 ரூபா,

ஒரு லட்சத்து 50 ஆயிரம் சமன் ரின் 100 ரூபா விலையிலும்

ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி 98 ரூபா விலையில்

அனுமதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு அரிசி 20 ஆயிரம் கிலோ , சீனி 50 ஆயிரம் கிலோ , பருப்பு 20 ஆயிரம் கிலோ எடுத்து வரும் அதேவேளை உள்ளூர் மீனவர்களின் நன்மை கருதி மீன்ரின் எடுத்து வரப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் 50 ஆயிரம் மீன்ரீன் , 50 ஆயிரம் கிலோ அரிசி , 25 ஆயிரம் கிலோ சீனி , 15 ஆயிரம் கிலோ பருப்பு , பெரிய வெங்காயம் 15 ஆயிரம் கிலோ அனுமதிக்கப்பட்ட நிலையில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் ஏற்றப்படுகின்றன.

அத்துடன் மன்னார் மாவட்டம் 25 ஆயிரம் கிலோ பருப்பு. , 25 ஆயிரம் மீன்ரின்.30 ஆயிரம் சீனி. 10 ஆயிரம் கிலோ வெங்காயம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவை கருதி அரிசி , மீன் ரின் தவிர்த்து சீனி , பருப்பு , வெங்காயம் ஏற்றப்படுகின்றது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்ட பொருட்களில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் எடுத்து வரப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...