Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | அடுத்த வாரத்தில் உயிரிழப்புக்கள் மேலும் 50 ஆயிரம் வரை உயரும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

RADIOTAMIZHA | அடுத்த வாரத்தில் உயிரிழப்புக்கள் மேலும் 50 ஆயிரம் வரை உயரும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது.

மேலும் வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ் கூறினார். அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என தெரிவித்தார்.

அதே நேரம் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...