Home / விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

RADIOTAMIZHA | 2 ஆண்டு பிறகு களமிறங்கிய சானியா மிர்சா ஜோடி சாம்பியன்

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக ...

Read More »

RADIOTAMIZHA | இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் நேற்று இந்தியாவை எதிர்கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணிக்கு வலுவான ஆரம்பம் கிடைத்தது. யஷாஸ்வி ஜய்ஸ்வால் 59 ...

Read More »

RADIOTAMIZHA | 19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவில் நேற்று (17) ஆரம்பமாகியது. இளைஞர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்று அந்த நாட்டில் 22 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்றது. 4 பிரிவுகளில் 16 குழுக்கள் கலந்து கொள்கின்றன. இலங்கை இம் முறை இந்த போட்டியில் ஏ பிரிவில் போட்டியிடுகின்றது. இதில் இந்தியா, நியூஸ்லாந்து, யப்பான் ...

Read More »

இலங்கை கிரிக்கெட் அணி ஸிம்பாப்வே பயணம் RADIOTAMIZHA

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இவ் வருடம் தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை, முதலாவது வெற்றியை சுவைக்கும் நம்பிக்கையுடன் ஸிம்பாப்வே நோக்கி நேற்று அதிகாலை இங்கிருந்து பயணமானது.இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்த இலங்கை, இப்போது ஸிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் ...

Read More »

தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல் RADIOTAMIZHA

இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு கிரேட் A+, A, B, C முதலிய ...

Read More »

மீண்டும் வருகிறார் பிராவோ RADIOTAMIZHA

மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ரீ20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் 15ம் திகதி தொடங்குகிறது. இதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் , ஆல்-ரவுண்டரான டுவெயின் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2016-ம் ஆண்டு ...

Read More »

தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்-லசித் மலிங்கா RADIOTAMIZHA

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக கருத்து வெளியிட்டிருக்கின்றார். வகுப்பு ஒன்றில் மாணவர்கள் சரி இல்லை என்றால் மாணவத்தலைவரை (Monitor) மாற்றி பிரயோசனம் இல்லை எனக் கூறிய லசித் மாலிங்க அவ்வாறு மாற்றம் வேண்டும் என்றால் மாணவத்தலைவர் மாற்றத்திற்கு தான் ...

Read More »

ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா RADIOTAMIZHA

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் 78 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக ...

Read More »

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 வது கடைசி போட்டி RADIOTAMIZHA

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (10, வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு ...

Read More »

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விலகியுள்ள-ஜேம்ஸ் அன்டர்சன் RADIOTAMIZHA

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் (James Anderson) விலகியுள்ளார். இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஜேம்ஸ் அன்டர்சன் ...

Read More »