Home / உள்நாட்டு செய்திகள் (page 727)

உள்நாட்டு செய்திகள்

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

ஸ்ரீலங்கா கடற்படையினரால் கபளீகரம் செய்யப்பட்ட மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள 25 வீட்டுத் திட்ட கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மக்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நில அளவீடு நடவடிக்கை ...

Read More »

துன்னாலையில் தொடரும் சித்திரவதைகள்!

  துன்னாலை பகுதியில் கைதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சித்திரவதை காரணமாக கோமா மயக்க நிலையில் தற்போதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் துன்னாலை பகுதியில் வைத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி காவல்; நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...

Read More »

காதலனை கரம்பிடிக்க சிறைச்சாலைக்கே சென்ற காதலி!! மனதை உருக்கும் சம்பவம்!!

திருமணம் முடிந்த 30 நிமிடங்களிலேயே தம்பதியினரை பிரித்து சட்டம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருட சிறைத்தண்டனைக்குரிய கைதியான செனரத் பந்துல லியனாராச்சி என்பவர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா என்ற யுவதியையே காதலித்து வந்துள்ளார். காதல் சிறைச்சாலையிலும் காதலி வீட்டிலும், ...

Read More »

மைத்திரி – மஹிந்த சுப நேரத்தில் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் ...

Read More »

இன்ஸ்பெக்டர்கள் 3029 பேருக்கு பதவி உயர்வு

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 3029 பேருக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொலிஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் சாகல ரத்னாயவிற்கும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (06) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் ...

Read More »

யாழில் இருந்து சொகுசு பஸ்ஸில் கஞ்சா கடத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

கிளிநொச்சி – பளைப்பகுதியில் சொகுசு பஸ் ஒன்றில் 12 கிலோ கஞ்சா கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் மற்றைய நபரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ...

Read More »

புதிய இராணுவ தொண்டர் படையணித் தளபதி நியமனம்

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணித் தளபதியாக மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன பதவியேற்றுள்ளார். கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையணித் தலைமையகத்தில் நேற்று புதிய தொண்டர்ப் படைத் தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்றகப்பட்டதை தொடர்ந்து பிரித் சமய வழிபாடுகளும் இடம்பெற்றது.   புதிய தொண்டர் படைத் தளபதியவர்களால் படைத் தலைமையக வளாகத்தில் மரநடுகையும் இதன்போது நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தமது ...

Read More »

சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் இல்லை : சுமந்திரன்

உதயசூரியன் சின்னம் தமிழர்களுடைய அரசியல் வாழ்விலே மறக்கமுடியாத ஓர் சின்னம் . ஏனென்றால் 1977 ஆம்ஆண்டு தமிழ் நாடு கோரிக்கையை முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றது இந்த உதயசூரியன் சின்னம் .   ஆனால் 2003 ஆம் ஆண்டு ஆணந்தசங்கரி அந்த கட்சியை முடக்கி 2004 ஆம் ஆண்டு அந்த சின்னத்தை பயன்படுத்தாதவாறு நீதிமன்ற கட்டளை ...

Read More »

2010-இல் மல்லாவியில் இளைஞர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி கிளிநொச்சி- மல்லாவியில் 28 வயதான வேலுப்பிள்ளை சசிரூபன் என்பவர் கொலை செய்யப்பட்டு, கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்தார். இந்த கொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு இன்று மரண ...

Read More »

இலங்கையில் இப்படியொரு மோசடி திருடன்! சிசிரிவி காணொளி அம்பலம்

இலங்கையில் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிபாகங்களை திருடும் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். கார் ஒன்றின் பாகங்களை திருடும் போது அருகிலிருந்த கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. “Sri Lankan Traffic Violations” என பேஸ்புக் பக்கத்தில் இந்த காட்சி பதிவிடப்பட்டுள்ள போதிலும் சம்பவம் ...

Read More »