Home / உள்நாட்டு செய்திகள் (page 710)

உள்நாட்டு செய்திகள்

மலேஷிய பிரதமருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ளள மலேஷிய பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக்கிற்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மலேஷிய பிரதமருடன் மலேஷிய நாட்டின் சுகாதார அமைச்சர்  எஸ்.சுப்பிரமணியம் வர்த்தக அமைச்சர் முஸ்தப்பா முஹமத் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணனுடன் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் கயந்த ...

Read More »

சேதமடைந்த நாணயத்தாள்கள் — டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும்

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் ...

Read More »

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு..!

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் ...

Read More »

பதவியை இராஜினாமா செய்தார் நிமல் லான்சா..!

உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர்  நிமல் லான்சா தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் நிமல் லான்சா பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மஹிந்தவின் சூழ்ச்சி ஒருபோதும் வெற்றியளிக்காது; சந்திரிக்கா

சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1980 ஆண்டில் செய்த சூழ்ச்சியை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க , கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான நடவடிக்கைகளை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார். உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்புமனு தாக்கல் இன்று ...

Read More »

இலங்கை தேயிலைக்கான தடை விரைவில் நீக்கப்படும்..!

இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை தொகை ஒன்றில் வண்டு இனம் ஒன்று கண்டறியப்பட்டதால் இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை விரைவில் நீக்கப்படும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இலங்கை தேயிலை இறக்குமதி ...

Read More »

வவுனியாவில் வீடொன்று எரிந்து நாசம்..!

வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கணேசபுரம், 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் குடும்பத்தினர் வவுனியா நகருக்கு சென்று வீடு திரும்பிய நிலையிலேயே அவர்கள் வசித்த தற்காலிக வீடு ...

Read More »

வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம்..!

யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது. குறித்த  விபத்து சம்பவானது இன்று காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.அரச திணைக்களத்திற்கு சொந்தமான டபிள்கப் ரக வாகனமொன்றே இவ்வாறு வல்லை பாலத்திற்கு அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான போதும் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் ...

Read More »

சிறுவர்களை காணவில்லை! மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்தார். கணவன் – மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக சிறுவர்களை அவர்களது தந்தை  அழைத்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதனால் சிறுவர்களின் நலன்கருதி இவர்கள் தொடர்பான தகவல்கள் ...

Read More »

மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவம்

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய  இரதோற்சவப் பெருவிழா இன்று 17.12.2017 காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

Read More »