Home / உள்நாட்டு செய்திகள் (page 702)

உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் ஆரம்பமானது உள்நாட்டு விமான சேவை.

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை ஏற்றிய பயணிகள் விமானம் இன்று மட்டக்களப்பு விமான நிலையத்தை சென்றடைந்தது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமலசிறியினால், ...

Read More »

கொழும்பில்அக்காவிற்கு யமனாக தங்கை மாறிய கொடூரம்!

கொழும்பு 15 – மோதரை வீதி பகுதியில் இரண்டு சகோதிரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு அதிகரித்து இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைய சகோதரியால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் ...

Read More »

சற்றுமுன் யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக சிலதினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனடிப்படையில் மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஆளுநரை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லோகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

Read More »

தென்னிலங்கை யுவதி தற்கொலை

தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலி மாவட்டம் ஹினிதும மல்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே அதே இடத்திலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை வீட்டின் அறையில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை ...

Read More »

தென்இந்திய நடிகருக்கு குடை பிடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நபர்!

நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இலங்கையில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆா்யாவை திருமணம் செய்யும் போட்டியாளா்களின் வரிசையில், ஒருவராக இலங்கையைச் சேர்ந்த சுசானா இருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் அனைலைதீவு பகுதியில் உள்ள சுசானாவின் வீட்டிற்கு ஆா்யா நேற்றைய தினம் சென்றுள்ளாா். அங்கு அப்பகுதி ...

Read More »

யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையம் மீது இன்று(25-03-2018) மாலை இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ஜிப்சன் தகடுகள் விற்பனை செய்யும் நிலையமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியது. இன்று (25) மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு ...

Read More »

இளைஞர்களின் செயற்பாட்டினால் ஆனந்தமடைந்த முதல்வர்.

ஒரு கிராமத்தில் சனசமூக நிலையம் சிறப்புற இயங்குமாயின் அந்த கிராமம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு எந்த தடையும் இல்லை என்பது பொதுவான கருத்து என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலைய புதிய கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ...

Read More »

மாணவிக்கு பேருந்து நிலையத்தில் நேர்ந்த விபரீதம்!

வவுனியா – புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று 33 வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், தரம் 9இல் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியொருவர் நேற்றைய தினம் மேலதிக வகுப்பிற்காக சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு ...

Read More »

பொது மன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்துச் சமர்.!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியிலும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். களுவாஞ்சிகுடி ...

Read More »