Home / உள்நாட்டு செய்திகள் (page 701)

உள்நாட்டு செய்திகள்

ஓட்டுமடம் பகுதியில் போதைப் பொருட்களுடன் பிடிப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை..!

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நேற்று ரூபா பத்தாயிரம் அபராதமும் இரண்டு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பிரிவினரால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் அதனை அண்டிய ஒட்டுமடம் பகுதியிலும் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் ...

Read More »

பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடுகடத்த முடிவு..!

மருத்துவ சிகிச்சை பெற வலியுறுத்தி பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசத் தலைமை சட்டத்தரணி அளித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில், கடந்த அரசாங்கத்தில் அளித்த உளவியல் ...

Read More »

தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள்!

தமிழர்கள் இனிவரும் காலங்களில் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரிப் போராடியதன் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணிதெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராய்ச்சி தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு பிரிவினை வாதத்தை தமிழர்கள் இப்போதுவிரும்பவில்லை. இந்நிலையில், வடக்குக் கிழக்கு அரசியல் வாதிகளுக்கு பிரிவினையைக் கோராது ...

Read More »

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் நாளை பணிப் பகிஸ்கரிப்பு..!

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை காலை- 07 மணியிலிருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-07 மணி வரையான 24 மணிநேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று செய்திக் குறிப்பொன்றைய வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பள முரண்பாடு மற்றும் ...

Read More »

குருவிட்ட விபத்தில் மூவர் பலி

ரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுஸர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

இலங்கையில் மீன் இறக்குமதிக்குத் தடை..!

இலங்கையின் மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கான மீன் இறக்குமதியினை நிறுத்தக்கோரியும், இலங்கையில் மீன் விலையினை குறைக்குமாறும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More »

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயம்..!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமஸ்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற பொழுதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் மற்றுமொருவரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று ...

Read More »

சைட்டம்: “மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகளில் மாற்றமில்லை”

சைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், சற்று முன்னர் நிறைவுபெற்ற இலங்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான தகுதிகள், தராதரங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. சபைத் தலைவர் பேராசிரியர் கொலிவின் குணரத்ன தலைமையில், சற்று முன்னர் நிறைவுபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ரயிலில் மோதுண்டு மாணவன் பலி..!

வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில் கடவையை கடக்க முயன்ற போதே  கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய ...

Read More »

தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியீடு..!

உள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா தெரிவித்தார். முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி ஆறாம் அல்லது இருபதாம் அல்லது இருபத்தேழாம் திகதிகளில் நடைபெறலாம் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், ...

Read More »