Home / உள்நாட்டு செய்திகள் (page 700)

உள்நாட்டு செய்திகள்

திட்டமிடப்பட்ட ரயில் சேவை பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

பிரதமர் செயலாளரின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ரயில்வே தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில்  இன்று பகல் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் சேவை பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது என ரயில்வே தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. சம்பளப் பிரச்சினையை முன்னிருத்தி ரயில்வே தொழிற் சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் 48 ...

Read More »

அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சில்  இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி  12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. ...

Read More »

பெற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்கவும்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகம் குறிப்பாக பொற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டுமென உத்தரவளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிருபமொன்று நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங் தெரிவித்தார். இதேவேளை, பெற்றோல் விநி­யோகம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்­குத்­தி­ரும்­ப­வுள்­ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவை­யான ...

Read More »

காதலியை தாக்கிய காதலன்; நடந்தது என்ன??

திருமணத்தை பின் தள்ளி போட்டதிற்காக தனது காதலியை தாக்கிய காதலனை 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை  செய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் துலானி அமரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் தெமட்டகொடையைச் சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் செந்தில் குமார் எனும் இளைஞராவார். மீண்டும் குறித்த பெண்ணிற்கு ஏதாவது ...

Read More »

பெற்றோல் தட்டுப்பாட்டால் மலையகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல்.!

நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் நிலை காணப்பட்டு வருகின்றன. ஹட்டன் பகுதில் சில பெற்றோல் நிறைவு பெற்றுள்ளதால் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகன நெரிசல் காணப்பட்டன.பெற்றோல் நிலையங்களில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக பொது போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டன. இந்த ...

Read More »

பஸ் விபத்தில் இரு குழந்தைகளின் தந்தை பலி…! மட்டுவில் சம்பவம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். மின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37 என்பவரே குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவராவார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இவ் விபத்து ...

Read More »

தேசிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாடு முழுவதிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடன் காலநிலையை அடுத்து டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா , களுத்துளை , ...

Read More »

20 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசி சந்தைக்கு விநியோகம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்சமயம் சதொஸ விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் என்பனவற்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 136 கோடி ரூபா பெறுமதியான அரிசி சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ...

Read More »

நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்கள் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு

அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானதென இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை மேலும் தெரிவிக்கையில், இதன் இலக்குகள் வட்டி வீதத்தை தனி அலகினால் ...

Read More »

பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆலோசனை

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளது. 2018 வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 வரவு செலவுத் திட்டத்திற்காக சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள ...

Read More »