Home / உள்நாட்டு செய்திகள் (page 699)

உள்நாட்டு செய்திகள்

பழிதீர்க்க அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச் சூடு..!

கொஸ்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கொஸ்கொடையில் நேற்று முன்தினம் (29) அதிகாலை மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், தந்தை மற்றும் அவரது தனயன்கள் இருவரும், மற்றொரு 39 வயது நபரும் கொல்லப்பட்டனர். பதினைந்து வயது மாணவர் ஒருவர் காலில் துப்பாக்கிக் காயத்துக்கு ஆளானார். இச்சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி ...

Read More »

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு சுமார் 70 முதல் 80 மைல் வேகத்துக்குக் காற்று வீசலாம் என்றும் இதனால் குறிப்பாக, காலி முதல் புத்தளம் மற்றும் ...

Read More »

இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய பிரதமர்..!

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கிடையிலான 70 வருட நட்புறவினை முன்னிட்டே அவரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ...

Read More »

கருணா அம்மான் விடுதலை.!

9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர்  விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ...

Read More »

ஏறாவூர் இரட்டை படுகொலை; பிரதான சூத்திரதாரி கைது

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில் இருந்து 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ...

Read More »

வெள்ளவத்தையில் ஹெரோயின் பறிமுதல்..!

1.6 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் வெள்ளவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வெள்ளவத்தையில் சந்தேகத்துக்கிடமான இரண்டு பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோகிராம் எடை கொண்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ...

Read More »

யாழ் தனியார் வைத்தியசாலை சிக்கல்; ஒருவர் பார்வை இழப்பு???

சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ...

Read More »

சைட்டம் விவகாரத்தில் பெற்றோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு..!

சைட்டம் விவகாரத்துக்கான தீர்வு ஒன்று பெறப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உண்ணாவிரதத்துக்கான திகதி இன்று தீர்மானிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது. இதில், சைட்டம் விவகாரம் குறித்து போலியான தீர்வு ஒன்றையே அரசு தற்போது கையிலெடுத்திருக்கிறது என்றும் ...

Read More »

கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி!

கொஸ்கொட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.கொஸ்கொட பகுதியில் மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

மேலாடை இன்றி பஸ்ஸில் பயணித்த நபரால் பரபரப்பு..!

நுகேகொட பகுதியில்  பாலத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தில்  துவாய் மாத்திரம் அணிந்து நின்று கொண்டிருந்த  இளைஞன் பஸ்ஸில் ஏறியதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்திலேயே  குறித்த இளைஞன் துவாய் மாத்திரம் அணிந்து பஸ் நிலையத்தில் கோட்டை பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார் குறித்த பஸ் வந்ததும் பஸ்ஸிற்குள்  நுழைந்துள்ளார். பஸ்ஸிற்குள்  இருந்த சில இளைஞர்களுடன்  குறித்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. துவாய் மாத்திரம் அணிந்து வந்தமையினால் அந்த ...

Read More »