Home / உள்நாட்டு செய்திகள் (page 697)

உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டை இன்று முதல் சர்வதேச தரத்தில்..!

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச தரத்திலான புகைப்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும். குறித்த ...

Read More »

இணையவாசிகளுக்கு இன்று முதல் கொண்டாட்டம்..!

இணையத்தளத்தை பயன்படுத்த இதுவரை அறவிடப்பட்டு வந்த 10 வீத தொலைத் தொடர்பு வரி இன்று முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இணையத்தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10 வீத டேட்டாக்களை அதிகரித்து வழங்கவும் நிறுவனங்கள் இணங்கியுள்ளன.  

Read More »

நரி வாலைப் பிடிக்கும் சம்பந்தன்- மகிந்தவுடன் சந்திப்பு..?

தமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சம்பந்தன் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளார். இன்று வரையில் ...

Read More »

இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4 வது ஒருநாள் போட்டி, கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது,ஆரம்ப வீரர் தவான் வேகமாக ஆட்டமிழந்தாலும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோஹ்லி, ரோஹித் சர்மா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களை திணறடித்து. ...

Read More »

ஓமந்தையில் சிறுவன் மீது பொலிசாரின் அடாவடி தாக்குதல்

வவுனியா ஓமந்தை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து 14 வயது சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த சிறுவனே தனது தம்பியுடன் அரசமுறிப்பு குளப்பகுதியில் மாட்டை பிடித்து கட்ட சென்ற சமயம் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த சிறுவனும் தாயாரும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான சிறுவன் ...

Read More »

அமைச்சர் ப.டெனீஸ்வரன் கொழும்பு நீதிமன்றத்தில் விக்கிக்கு எதிராக மனு தாக்கல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறி தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனத் தெரிவித்து முன்னாள் வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் கொழும்பு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின்படி இந்த மனுவை நேற்று(30) தாக்கல் செய்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

Read More »

இந்து சமுத்திர மாநாடு, பரபரப்பாகும் கொழும்பு..!

இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு அலரி மாளிகையில் இன்று ஆரம்பமாகிறது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சீஸேல்ஸ் உப ஜனாதிபதி வின்சன்ட் மார்ட்டின், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரால் இந்த ...

Read More »

ஆரம்பமே மஹிந்தவுக்கு ஆப்பு – புதிய நீதியமைச்சர்..!

புதிதாக நீதியமைச்சை பொறுப்பேற்றுள்ள தலதா அதுகோரள சுப நேரத்தில் நீதியமைச்சில் தனது பணிகளை இன்று ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கருத்து தெரிவித்த அவர், “நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை பாதுகாத்து நல்லாட்சியை உருவாக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றவுள்ளேன். எமது நேர்மை காரணமாகவே ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அந்த வகையில், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக ...

Read More »

வரும் நாட்களில் இலங்கையில் அடைமழைக்கு வாய்ப்பு..!

இலங்கையில் அடுத்து வரும் இரு தினங்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு ஏற்படும். பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை மாவட்டத்தின் ...

Read More »

யாழில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். ...

Read More »