Home / உள்நாட்டு செய்திகள் (page 680)

உள்நாட்டு செய்திகள்

ஆன்மீகத் தலங்களுக்கு தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

வேட்பாளர்களைப் பிரபலப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் வகையில் ஆன்மீக செயற்பாடுகள் நடத்தப்பட்டாலோ அல்லது ஆன்மீகத் தலங்களில் தேர்தல் உறுதிமொழிகள் வெளியிடப்பட்டாலோ, குறித்த வேட்பாளர் மீதும் குறித்த ஆன்மீகத் தலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே ...

Read More »

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் மீதான தடை நீட்டிப்பு..!

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிப்பதற்கு மத்திய வங்கி கண்காணிப்புச் சபை முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல் அடுத்த ஆறு மாத காலத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்கங்கள் யாவும் முடக்கப்படுகின்றன. பிணைமுறியி விவகாரத்தின் பிரதான வினியோகத்தராகக் கருதப்படும் மேற்படி நிறுவனத்தில், மத்திய வங்கி சில ஆய்வுகளை நடத்த ...

Read More »

2018 இல் பாரிய மாற்றத்துக்கு தேசிய அரசாங்கம் தயார் ; பிரதமர் அறிவிப்பு

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கம் என்ற வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றதத்திற்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுத்தோம். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு குழு தொடர்ந்தும் அரச மற்றும் தனியார் துறையுடன் தொடர்புக்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ...

Read More »

அரசாங்கம் மீது குற்றம் கூறுவதை ஏற்க முடியாது ; ஜோன் அமரதுங்க

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத்தின் மீது எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரிகட்சிகள்  குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதஅலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஜனாதிபதியும்,பிரதமரும் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண ...

Read More »

யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில், நீதிபதி இளஞ்செழியனை யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்துப் பேசியிருந்தார். புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சந்திப்பின் ...

Read More »

ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரா கோனோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்த ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க வரவேற்றார். ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவர் 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை விஜயம் ...

Read More »

முதலமைச்சர் தானும் ”குழம்பாமல் , ‘ ‘மக்களைக் குழப்பாமல்” இருப்பது அதி முக்கிய தேவையாகும்!! : தமிழ் அரசுக் கட்சி பதிலடி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த ...

Read More »

“தமிழரசின் வங்குரோத்து அரசியலுக்காக நான் அனுதாப்படுகின்றேன்”!! – முதலமைச்சர்

மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக இருக்கலாம். அவ்வாறான உயிரினங்கள் கூட தமது வாலை மிதித்துவிட்டால் சத்தம் போட்டாவது எதிர்ப்பை வெளிக் காட்டுவன எனக் குறிப்பிட்டிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் காணி பறி போகின்றது. வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. வாணிபம் பறிபோகின்றது. ...

Read More »

திருகோணமலை துறைமுகம் விவசாய உற்பத்தி ஏற்றுமதி துறைமுகமாக அபிவிருத்தி

விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். மொறகஹந்தை விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து செயலாளர் இவ்வாறு விளக்கமளித்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளருடனான சந்திப்பில் ...

Read More »

யாழ். சந்திலிப்பாயில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – மானிப்பாய், சந்திலிப்பாய் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சந்திலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) பிற்பகல் மீட்கப்பட்ட இந்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் ...

Read More »