Home / உள்நாட்டு செய்திகள் (page 670)

உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாணம் தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

மேல்மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்படங்கள் கோரப்பட்டுள்ளன. மேல்மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாளைகளில்  காணப்படும் வெற்றிடங்களுக்கு மேல்மாகாணத்திற்குள் நிரந்தரமாக வசிக்கும் விண்ணப்பதாரிகள் எழுத்துமூல போட்டிப்பரீட்சைக்கு சித்தியடையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் புள்ளிகளின் அடிப்படையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா ...

Read More »

உடரட மெனிகே ரயில் சேவை மீண்டும் வழமை போன்று

மலையக ரயில் பாதையில் தடைபட்டிருந்த உடரட மெனிகே ரயில் சேவை மீண்டும் வழமைக்குத்திரும்பியுள்ளது. ரொசல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரயில்பாதை சீர்செய்யப்பட்டது. சுமார் 3 மணித்தியாலம் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று , தெமடகொடை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் தடைப்பட்டிருந்த களனிவெலி ரயில் ...

Read More »

மட்டக்களப்பு – பாலமீன்மடு மீவனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

  சர்வதேச மீனவர் தினமான இன்று மட்டக்களப்பு – பாலமீன்மடு மீவனவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கழிமுகத்தை மூட கோரியும், வெளி மீனவர்களையும், சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கோரியும் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More »

ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது?

இராணுவ அதிரடிப் படையினரின் வீதிச் சோதனையின்போது ஆவா குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்குக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. பருத்தித்துறை, நீர்வேலியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியொன்றைப் பரிசோதனை செய்த அதிரடிப் படையினர், சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர். சந்தேக நபர்களின் கைபேசிகளைப் பரிசோதனை செய்தபோது, அவற்றில் ...

Read More »

பாறை உருண்டு விழுந்து இளைஞர் பலி..!

உறவினர்களுக்குப் பயந்து கற்குவாரியில் ஒளிந்திருந்த இளைஞன், பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பாதுக்கையில் இடம்பெற்றுள்ளது. எச்.பி.ஜானக குமார (20) என்பவர் பாதுக்கை, மீரியகால்ல பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் தன் மீது தாக்குதல் ...

Read More »

கிந்தோட்டை வன்முறை : 127 சம்பவங்கள் பதிவு,4 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்.

காலி – கிந்தோட்டை பகுதியில் சிங்கள – முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை வன்முறையாக மாறியதால் மொத்தமாக 127 அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் விசாரணைகள் ஊடாக இவை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதனிடையே கிந்தோட்டையில் நிலவிய பதற்றம் மற்றும் பாதுகாப்பு ...

Read More »

ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று காலை  உயர் நீதிமன்றில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கும் குரல் பதிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ ...

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு நாளை கூடுகின்றது.!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில் கூடுகின்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை ஸ்ரீலங்கா சுதந்திர ...

Read More »

க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

அடுத்த மாதம் 12ம் திகதி ஆரம்பமாகும் ஜிசிஈ சாதாரண தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்தத்தி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவிக்கையில் இம்முறை புதிய பாடத்திட்டத்தின் கீழ் நான்கு இலட்சத்து 14 ஆயிரத்து 94 பேர் தோற்றுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் 14 ஆயிரத்து 799 பேர் தோற்றுகின்றனர். இதற்கமைவாக பரீட்சைக்கு ...

Read More »

பிரதமர் இன்று இந்தியா பயணமாகிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். அவர் புதுடெல்லியில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவி;ந்த் அவர்களையும் பிரதமர் சந்திப்பார். நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடெல்லி ஏரோ நகரில்  இந்திய பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும் ஆறாவது இணையவெளி Conference on Cyberspace  மாநாட்டின் ...

Read More »