Home / உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு செய்திகள்

மிளகாய் தூள் தாக்குதலுக்கு மத்தியில் நிறைவேற்றிய பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயத்தினை கருத்திற் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

இலங்கையின் நிலைப்பாட்டை முழு உலகமே அவதானித்துள்ளது

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் ...

Read More »

மஹிந்த மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென விரும்புகின்றனர்

மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் கNநை;திரமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர். அதற்காகவே இன்றையஅரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டுமென்றும் கோருகின்றதாக கூட்டமைப்பின் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குகருத்துவெளியிடுகையிலையேமேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். இந்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… தற்பொழுது ஏற்பட்டிருக்கும் ...

Read More »

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் கொடுப்பேன்

அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை நேசிக்கும் அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடனும் அமைதியாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளும் தரப்பின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் ...

Read More »

மஹிந்தரப்பின் அகோர தாண்டவம் வெளியானது – விஜிதஹேரத்

ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக விரோதமான முறையில் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான குழு அகோரமாக பாராளுமன்றத்தில் செயற்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக பல ...

Read More »

போட்டுப் பிடிக்கும் சிங்கள தேசம்.. கொலைவெறித் தாக்குதலை ஊக்குவிக்க ஹெலிகொப்டரில் வந்த மஹிந்த

பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். சாதாரண தரப் பரீட்சையில் கூட தோற்றாத படிப்பறிவற்ற மீன் வியாபாரம், குடு, கசிப்பு விற்பனை செய்த சிலரே இன்று பாராளுமன்றில் அராஜகத்தில் முன்னின்று செயற்பட்டனர் ...

Read More »

சபையில் சம்பந்தன் காட்டம்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். “மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது அமைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.

Read More »

பாராளுமன்றிற்கு சபாநாயகர் வருகை தந்த விதம்…

பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் செங்கோலுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காட்சி

Read More »

தற்போதைய செய்தி..

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் ,   பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவருக்கு எதிராக புத்தகங்களையும் கதிரைகளையும் வீசியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பலத்த எதிர்ப்பு காராணமாக பாராளுமன்றத்திலிருந்து சபாநாயகர் கரு ஜயசூரிய பொலிஸ் பாதுகாப்புடன் வௌியேற்றினார்.   சபை ஒத்திவைப்பு

Read More »

விசேட செய்தி- நாடாளுமன்ற ஒழுங்குபடுத்தற் பத்திரம் வெளியீடு

நாடாளுமன்றம் இன்று மதியம் 1.30 மணிக்கு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நாடாளுமன்ற ஒழுங்குபடுத்தற் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குபடுத்தற் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் இலக்க உறுப்புரைக்கு அமைவாக இந்த நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் உறுப்புரையானது, நாடாளுமன்ற சிறப்புரிமை சார்ந்து உறுப்பினர்களின் ...

Read More »