Home / இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை-பிரதமர் மோடி

கேதார்நாத் கோவிலில் இன்று மீண்டும் வழிபட்ட பிரதமர் மோடி, தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். 2 நாள் பயணமாக நேற்று உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலுக்கு சென்று ...

Read More »

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருட சேவை உற்சவத்தையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோவிலின் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என முழக்கமிட்டனர். 101 பஜனை கோஷ்டிகள் பின்தொடர, வேத ...

Read More »

வைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இன்று முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. ...

Read More »

காரில் மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்!!

சேலத்தில் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையில், காரில் மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று அதிகாலை செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ...

Read More »

4 தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ...

Read More »

கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் விபச்சார புரோக்கர்கள்! 1 மணி நேரத்திற்கு, 10 ரூபாய்! அதிர வைக்கும் தகவல்!

பார்ட் டைம் என்கிற பெயரில் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளையும் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் மாணவிகளையும் குறிவைத்து, ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக சிலர் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ...

Read More »

59 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பும் நிறைவு பெறுகிறது

நாடாளுமன்ற மக்களவைக்கு இறுதி கட்டமாக 59 தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை யுடன் ஓய்கிறது. மேற்குவங்கத்தில் மட்டும் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என்றும் ...

Read More »

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? – உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் ஸ்ரீநகர், அவந்திபுரா உள்ளிட்ட விமானப்படைத் தளங்களை குறி வைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ...

Read More »

வெறும் வெற்றியல்ல; இமாலய வெற்றி: மோடிக்கு ஆதரவாக வாரணாசியில் திரண்ட பாஜக நிர்வாகிகள்

வராணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் முன்னாள் எம்எல்ஏவான அஜய்ராய் போட்டியிடுகிறார். 2014 தேர்தலிலும் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ராய், வெறும் ...

Read More »

கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசனின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது ...

Read More »