Home / உள்நாட்டு செய்திகள் / 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!!

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!!

மன்னார் நடுகுடா பகுதியில் 24 திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர் மேலும் இது மன்னார் நாடுகுடாவின் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இதுவரை 16,500 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: