Home / விளையாட்டுச் செய்திகள் / 9 விக்கட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

9 விக்கட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தமது முதல் இனிங்சிற்காக 187 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சிற்காக 120 ஓட்டங்களையும் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சிற்காக 277 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படி தமது இரண்டாவது இனிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றிப்பெற 30 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது.

அந்த இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கட்டை இழந்த நிலையில் அடைந்தது. இதனிடையே சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஹெமில்டனில் ஆரம்பமானது.  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல்நாள் ஆட்டத்தின் போது மழையின் குறுக்கீடு காரணமாக 55 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. போட்டியின் முதல் நாளான இன்று தமது முதல் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலிய அணி ஒரு விக்கட்டை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: