Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 05/12/2017

இன்றைய நாள் எப்படி 05/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 15ம் தேதி,
5.12.17 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி மாலை 5:45 வரை;
அதன் பின் திரிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6:48 மணி வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:37 வரை; சித்த, மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை.
பொது : துர்க்கை வழிபாடு.

மேஷம் : முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : எண்ணமும் செயலும் மாறுபடலாம். குடும்ப உறுப்பினர்களின் உதவி நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

மிதுனம் : தாமதமான செயல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்கள் நகை வாங்கலாம்.

கடகம் : மன வருத்தம் தீர இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம் : செயலில் உற்சாகம் அதிகரிக்கும். மனதில் நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். நிலுவை பணம் வசூலாகும். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி : மனதில் உதித்த திட்டம் செயல் வடிவம் பெறும். நேர்மைக்கு தக்க பரிசு கிடைக்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

துலாம் : அவசர செயல்களால் அவதிப்பட நேரிடும். பொறுமை மிக அவசியம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர்.

விருச்சிகம் : முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். போக்குவரத்தில் கவனம் தேவை. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு செலவீர்கள்.

தனுசு : புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். சிரமமான சூழல் தெய்வ அருளால் விலகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மகரம் : நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் லாபமும் நன்மையும் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

கும்பம் : பிறருக்கு உதவி செயவீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற தாமதமாகும். முக்கிய செலவுக்கு கடன் பெறுவீர்கள். துாங்குவதற்கு சிரமம் இருக்கலாம். வீடு, வாகனம், ஆபரணத்தில் கவனம் தேவை.

மீனம் : அறிமுகமில்லாதவரிடம் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், தை மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி, 17.1.20 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி ...

%d bloggers like this: