Home / சினிமா செய்திகள் / 76ம் ஆண்டில் இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 76வது பிறந்த நாள்

76ம் ஆண்டில் இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 76வது பிறந்த நாள்

1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 43 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில்தான் இந்த 43 ஆண்டுகள், ஆனால், இப்படிப்பட்ட இசை மேதைகள் பிறந்ததிலிருந்தே மேதைகள் என அவருடன் பயணித்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

76ம் ஆண்டில் தன் பெயரிலான அதிகாரப்பூர்வ இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 76வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம்.

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா.

உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ரனி, பன்றிக்கு ...

%d bloggers like this: