Home / கட்டுரைகள் / வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.
1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.
1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1847 – அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
1849 – அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.
1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.
1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.
1890 – யாழ்ப்பாண நகரில் “சின்னக்கடை” எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.[1] 1908 – ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.
1923 – முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.
1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.
1981 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
1987 – பிஜி குடியரசாகியது.
1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.
2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள் 

1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)
1732 – நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811)
1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)
1846 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1914)
1887 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர், ஓவியர் (இ. 1965)
1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியலாளர் (இ. 1956)
1897 – புளோரன்ஸ் பி. சீபர்ட், அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 1991)
1928 – டி. என். கிருஷ்ணன், கேரள வயலின் இசைக் கலைஞர்
1930 – பஜன்லால், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2011)
1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2015)
1931 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (இ. 2004)
1931 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2018)
1935 – புலமைப்பித்தன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர்
1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)
1944 – ஜீதன் ராம் மாஞ்சி, பீகாரின் 23-வது முதலமைச்சர்
1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2012)
1946 – வினோத் கன்னா, இந்தி நடிகர்
1957 – ஏ. எல். எம். அதாவுல்லா, இலங்கை அரசியல்வாதி
1969 – கெலந்தானின் ஐந்தாம் முகம்மது, மலேசிய மன்னர்
1982 – சிபிராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்

இறப்புகள் 

1661 – குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630)
1892 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1809)
1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானியப் புவியியலாளர் (பி. 1833)
1944 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞர், இந்தியவியலாளர் (பி. 1879)
1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1884)
1962 – ப. சுப்பராயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)
1974 – வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1896)
1981 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)

சிறப்பு நாள் 

யோம் கிப்பூர் நினைவு நாள் (சிரியா)
உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)
ஆசிரியர் நாள் (இலங்கை)

About இனியவன்

x

Check Also

வரலாற்றில் இன்று

  நிகழ்வுகள்  1282 – அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார். 1666 – இலண்டனின் பெரும் ...