Home / இந்திய செய்திகள் / 600 கோடி ரூபாயில் சந்திரயான் -3 திட்டம்

600 கோடி ரூபாயில் சந்திரயான் -3 திட்டம்

சந்திரயான்-3 திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

600 கோடி ரூபாயில் சந்திரயான் -3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான காணி கிடைத்துள்ளது. பணி துவங்கிவிட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.. விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்றும் அவர் கூறினார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் போது பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டிப்பிடித்ததால், அழுதுவிட்டேன்சந்திரயான்-2 திட்டத்தில், திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், வேகமாகச் சென்று நிலவில் மோதியதால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய அறிவியல் தகவல்களை அனுப்பும் என்று கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலகின் மிக நீள­மான ‘கேக்’ இந்­தி­யாவில் உரு­வாக்­கி கின்னஸ் சாத­னை RADIOTAMIZHA

உலகின் மிக நீள­மான ‘கேக்’ இந்­தி­யாவின் கேரள மாநி­லத்தில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 6.5 கிலோ­மீற்­றர்கள் ஆகும். நூற்­றுக்­க­ணக்­கான சமையல் ...

%d bloggers like this: