Home / உலகச் செய்திகள் / 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!!

500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!!

ஆமதாபாத்,: குஜராத் கடற்பகுதியில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகிலிருந்து, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை, கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, கடலோர காவல் படையினருக்கு, போதை பொருட்கள், கடல் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லை அருகே, நேற்று(மே 21), பாகிஸ்தான் மீன்பிடி படகு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றது, கண்டுபிடிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர், அதிவிரைவு படகுகளில், பாக்., படகை துரத்திச் சென்றனர்.

அப்போது, அதில் இருந்தவர்கள், சில பாக்கெட்டுகளை கடலுக்குள் வீசினர். ஆனாலும், அதிகாரிகள், கடலுக்குள் குதித்து, அந்த பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அவற்றில், போதை பொருள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. ‘அவற்றின் சர்வதேச மதிப்பு, 500 கோடி ரூபாய்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்., படகில் இருந்தவர்களை பிடித்து, கடலோர காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: