Home / உலகச் செய்திகள் / 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.

ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில், பால் என்பவரும் அவரது 9 வயது மகன் ஜியா எலியாத்தும் (Jyah Elliott) மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது கடற்கரை மணல் பகுதியில் கிடந்த கண்ணாடி பாட்டில் ஒன்றில் கடிதம் ஒன்று அடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பாட்டிலை உடைத்து கடிதத்தை பால் படித்த போது 1969ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அப்போது 13 வயதே ஆன பால் கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரியவந்தது. அதில், இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு தான் குடிபெயர உள்ளதாகவும், ஆஸ்திரேலியா செல்லும் கப்பலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கில்மோரே தெரிவித்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

image

மேலும் தனது கடிதத்திற்கு பதில் அனுப்பும் படியும் அவர் எழுதி உள்ளார். இதனையடுத்து கில்மோரே எங்கு இருக்கிறார் என்பதை அறியாமல் சிறுவன் எலியாத் பதில் கடிதம் எழுதி அதனை பாட்டிலில் அடைத்து கடலில் வீசியுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

image

இந்நிலையில் 60 வயதை கடந்துள்ள கில்மோரே தற்போது பால்திக் கடல்பகுதியில்(Baltic) சொகுசு கப்பல் ஒன்றில் பயணித்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...

%d bloggers like this: