ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் உறவினர் ஒருவரால் 5 வயது குழந்தை கொடூரமாக சிதைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி அவசரநிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.
வன்கொடுமைக்கு ஆளான அந்த குழந்தையின் முதுகெலும்பு நொறுங்கியுள்ளதாகவும், வாழ்நாளில் அந்த குழந்தை எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் சியரா லியோன் நாட்டில் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஜனாதிபதி ஜூலியஸ் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் குறித்த குழந்தையின் 28 வயது உறவினரே வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
குழந்தைக்கு ஏற்பட்ட இந்த கொடூர நிகழ்வுக்கு கண்டிப்பாக பழி தீர்க்க வேண்டும் என அதன் பாட்டி சூளுரைத்துள்ளார்.
பிஞ்சு குழந்தையின் எதிர்காலத்தை சிதைத்த அந்த மிருகம் வாழ்நாளில் வெளியுலகமே காணாத வகையில் சிறையில் தள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு சியரா லியோன் நாட்டைப் பொறுத்தமட்டில் குற்றச்சாட்டுகளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான வன்கொடுமை வழக்குகள் தண்டனை வழங்கப்படாமலே முடித்து வைக்கப்படுகின்றன.
பெரும்பாலான சம்பவங்கள் கலாச்சாரம் கருதி வெளிச்சத்துக்கு வருவதில்லை எனவும், அந்த நிலை மாற வேண்டும் எனவும், அனைவரும் இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜூலியஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 8,500 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
LIKE-Facebook