Home / உலகச் செய்திகள் / 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம்!

40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து அவுஸ்திரேலியாவின் 22 நகரங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன.

குறிப்பாக குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பெரும்பாலானவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ராக்ஹாம்டன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 77 ஆயிரம் பேர், படகு மூலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அத்தோடு அந்நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

மேலும் பொலிசாரும், ராணுவத்தினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மழை வெள்ளம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் சில நாட்களுக்கு இந்த வெள்ளத்தினால் பாதிப்பு இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

About அகமுகிலன்

x

Check Also

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் ...

%d bloggers like this: