Home / உலகச் செய்திகள் / 4 மணி நேரம் அமேசான் மழைக்காடுகளில் கொட்டி தீர்த்த கனமழை!!

4 மணி நேரம் அமேசான் மழைக்காடுகளில் கொட்டி தீர்த்த கனமழை!!

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க வீரர்கள் போராடி வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரேசில் நாட்டில் மழை பெய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக பல இடங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதனை அணைக்கும் முயற்சியில் பிரேசில்,  பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானங்களுடன் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பரவிய தீயில் கருகி பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் உயிரிழந்த சம்பவம் பலரையும் உலுக்கியது. மேலும் தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில், தீயில் அதிகம் பாதிப்புக்குள்ளான பிரேசிலின் ரோன்டோனியா மாநிலத்தில் தொடர்ச்சியாக  4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்-இம்ரான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ...

%d bloggers like this: