Home / உள்நாட்டு செய்திகள் / 4 மணித்தியால சுற்றிவளைப்புக்களில் 3879 பேர் கைது!

4 மணித்தியால சுற்றிவளைப்புக்களில் 3879 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 4 மணித்தியால காவற்துறை சுற்றிவளைப்புக்களில் 3879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ,பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் குடிபோதையில் வாகனம் செலுத்திய 904  சாரதிகளும் போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆயிரத்து 33 பேரும் அடங்குவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளில் போக்குவரத்து குற்றங்களுக்காக ஐந்தாயிரத்து 22 பேருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: