Home / இந்திய செய்திகள் / 4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை

4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தமையினால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சருக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு இன்று வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பேரிடர் மேலாண்மை இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர்.

முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்தக் குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

About Radio tamizha

x

Check Also

கனடா பிரதமர் இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்­புக் கூறல் பொறிமு­றைமை ஒன்றை இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். பன்­னாட்டு மற்­றும் உள்­நாட்டு ரீதி­யில் ...

%d bloggers like this: