Home / உள்நாட்டு செய்திகள் / 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது..!!

4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க நகைகளை வெளியில் எடுத்துவர முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

410 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்கள் 40 மற்றும் தங்க நகைகளை குறித்த நபர் தனது கால்களில் மறைத்து வெளியில் எடுத்துவர முற்பட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை குறித்த நபர் சுங்க போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்தள பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீர்வையற்ற கடைத் தொகுதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம் ஒன்றில் சேவையாற்றும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடம் 100 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் 40 உம், 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான பயணி ஒருவர் குறித்த நகைகளை வெளியில் எடுத்து வந்து தரும்படி தன்னிடம் ஒப்படைத்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: