Home / உலகச் செய்திகள் / 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தங்கள் தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் அமெரிக்கர்கள் பங்கேற்பதை தாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும் இது நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் மிக விரைவான பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைகளை தாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் எங்கள் அனுகுமுறை அறிவியலுக்கு ஆதரவான ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டு வேகமாக முன்னேறி வருவதாக  தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஏனைய நாடுகளைப் போல ஊரடங்குகளை நம்பவில்லை என்றும் தமது திட்டங்கள் வைரஸ நசுக்கிக் கொன்றுவிடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்

எனினும் ஜோ பிடனின் திட்டங்கள் அமெரிக்காவை நசுக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...