Home / உள்நாட்டு செய்திகள் / 300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு

300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற வெள்­ளைவேன் கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் முன்னாள் பாது­காப்பு அதி­காரி ஒரு­வரே என்றும் அண்­ண­ள­வாக 300 பேர் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தி கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் , இந்த கடத்­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் ஒன்றின் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாக கூறப்­படும் அந்­தனி டக்லஸ் பெர்­னாண்டோ என்ற நபர் தெரி­வித்தார்.

கிரு­ளப்­ப­னையில் அமைந்­துள்ள ஜன­நா­யக தேசிய அமைப்பு காரி­யா­ல­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­னவின் தலை­மையில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இதில் கலந்­துக்­கொண்ட போதே அவர் இவ்­வாறு குறிப்­பட்டார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்

வெள்ளை வேன் கடத்­த­லுடன் தனக்கு தொடர்­பில்லை என்று சிலர் தற்­போது தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் முன்­னயை ஆட்­சியின் பாது­காப்பு அதி­காரி ஒரு­வரே இதன் பிர­தான சூதி­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர். இவ்­வாறு கடத்த பயன்­ப­டுத்­திய வேன்­களின் ஒன்­றி­னது சார­தி­யாக நானும் பணி­பு­ரிந்­துள்ளேன்.

இந்த கடத்­த­லுக்கு பொலி­ஸாரும் , இரா­ணு­வத்­தி­னரும் பெரிதும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கினர். கடத்தல் தொடர்பில் முன்­னயை ஆட்­சியின் பாது­காப்பு அதி­காரி பிரே­கே­டியர் ஒரு­வ­ருக்கும் , மேஜர் ஒரு­வ­ருக்கும் ஆலோ­ச­னை­களை வழங்­குவார். அவர்­களே இதனை வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்­துவர். இதன் போது நபர்­களை கடத்­து­வ­தற்கு வாக­ன­மொன்று பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் , அவரை மறைத்து வைத்து சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தும் இடத்­திற்கு பிரி­தொரு வாக­னத்­தி­லேயே அழைத்துச் செல்­வார்கள்.

இந்த இடங்­களில் அவர்கள் மறைத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். பின்னர் மேல­திக தக­வல்­களை பெறு­வ­தற்­காக அவர்கள் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் ஆளாக்­கப்­ப­டு­வார்கள்.

இவ்­வாறு பல கொடு­மைகள் செய்த பின்னர் அவர்கள் கொலை செய்­யப்­ப­டு­வார்கள். பின்னர் சட­லத்தில் உள் உறுப்­பு­களை அகற்­றி­விட்டு மொண­ரா­கலை – சீத்­தா­வக்கை காட்டுப் பகு­தியில் உள்ள குளம் ஒன்றில் போடு­வார்கள். அந்த குளத்­திலே 100 க்கும் அதி­க­மான முத­லைகள் வாழு­கின்­றன. இன்றும் கூட நீங்கள் அந்த குளத்தை சோத­னை­யிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்­கப்­பெறும்.

நான் இவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட போது இருவர் இவ்­வாறு கடத்­தப்­பட்டு கொலைச் செய்­ய­பட்­டனர். அதில் இரண்­டா­வது நப­ரான 60 வய­து­டைய ஒரு­வரை கடத்தும் போது இவ­ரது பிள்ளை கத­றி­யதை பார்த்­ததும் எனக்கு அங்­கி­ருக்க மன­வ­ருத்­த­மாக இருந்­தது. பின்னர் இங்­கி­ருந்து சென்று விகா­ரை­யொன்றில் வாழ்ந்து வந்தேன். ஆனால் மக்­களை காப்­பாற்ற வேண்டும் என்று பின்னர் இவர்­க­ளுக்கு எதி­ராக முறை­பா­ட­ளிக்க நட­வ­டிக்கை எடுத்தேன்.

இந்த விவ­காரம் தொடர்பில் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் முறை­பா­ட­ளித்த போது , நிலையப் பொறுப்­ப­தி­காரி அதனை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தாமல் மறைத்து விட்டார். பின்னர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கலாம் என்று அவர்­க­ளிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது ஊட­கங்­களும் இதனை வெளி­யிட மறுத்து விட்­டன.

இந்­நி­லை­யிலே அமைச்சர் ராஜித்த சேனா­நா­யக்க இந்த விடயம் தொடர்பில் அக்­கறை கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­ததை அடுத்து அவ­ரிடம் தெரி­வித்தேன். பின்னர் அவர் எனக்கு உத­வு­வ­தாக கூறினார். அதற்­கா­கவே இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு தெரிவிக்கின்றேன்.

நாட்டு மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது மீண்டும் ஒரு கொலைகார அரசாங்கத்தை உருவாக்காமல் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை யார் அமைத்துக் கொடுப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். நாட்டில் மீண்டும் வெள்ளை வேன் கலாச்சரம் ஏற்படுவதற்கு வழிவகுக்காதீர்கள் என்றார்.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ...