Home / இந்திய செய்திகள் / 26ம் திகதி வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு  மனுதாக்கல்!!

26ம் திகதி வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு  மனுதாக்கல்!!

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 26ம் திகதி வேட்பு  மனுதாக்கல் செய்ய உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் அந்த தொகுதியில் 26ம் திகதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25ம் திகதி வாரணாசி செல்கிறார். அன்று சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26ம் திகதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார்.

நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கலின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வாரணாசிக்கு வருவதற்கு முன்பு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

தவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர் !!

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து விட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் ...

%d bloggers like this: