Home / உள்நாட்டு செய்திகள் / 2017 வாக்காளர் இடாப்பு வெளியானது

2017 வாக்காளர் இடாப்பு வெளியானது

2017 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகல் தயாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வரைபு நகலை தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.

கொழும்பு நகரம், கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நகர மற்றும் நகர்சார் பிரதேசங்களில் வாக்காளர் இடாப்பில் உட்சேர்த்துக் கொள்வதில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதால், 2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறும், எதிர்வரும் தேர்தல்களின் போது 2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பெயர் காணப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிலவேளைகளில் தமது பெயர் 2017 வாக்காளர் இடாப்பில் இடம்பெறவில்லையாயின் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 18 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

About Radio tamizha

x

Check Also

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..!!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...

%d bloggers like this: