Home / உள்நாட்டு செய்திகள் / 20வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது

20வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது

20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் 18வதுதிருத்தம் மீண்டும் வலுப்படுத்தப்படும் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் மூலம் நாடாளுமன்றத்துக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்ற அதிகார ஜனாதிபதிக்கு 20வது திருத்தம் மூலம் மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் உச்சநீதிமன்றத்துக்கும் முப்படைகளுக்கும் காவல்துறைக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் தான் நினைத்தபடி உறுப்பினர்களை நியமிக்கமுடியும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு பேரவைக்கு பதில் புதிய நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது,எனினும் அரசநடவடிக்கைகள் நியமனங்களில் தலையிடுவதற்கான அதிகாரம் இந்த அமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் உச்சநீதிமன்றத்தினதும் ஏனைய அமைப்புகளினதும் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல அனைவரையும் இந்த திருத்தத்தை நிராகரித்து உச்சநீதிமன்றத்தின சுதந்திரத்தை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...