Home / உள்நாட்டு செய்திகள் / 19 ஆவது அரசியலமைப்பு மீது கைவைத்துள்ளமையானது ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது

19 ஆவது அரசியலமைப்பு மீது கைவைத்துள்ளமையானது ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது

வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தனி நபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கானவே குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொதாவில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு மீது கைவைத்துள்ளமையானது ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனி நபருக்குறிய அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது அரசியலமைப்பு பகிரந்தளித்தது. நிறைவேற்று அதிகாரம் முழுமையாக இல்லாதொழிக்கப்படும் நிலையில் இங்கு பிரச்சினை ஏற்படாது.

ஆனால் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியை போன்று தனி நபருக்கு அதி கூடிய அதிகாரம் எனும் போது அதற்கு மக்கள் ஆணை கிடையாது.

ஜனாதிபதிக்குறிய அதிகாரம் மற்றும்  ஆட்சி  முறைமையை முழுமையா கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றியமைக்கவே 2015 ஆம் ஆண்டில் முயற்சித்தோம். ஆனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் விதித்த தடையினால் முடியாமல் போனது. அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது.

மறுப்புறம் 19 ஆவது அரசியலமைப்பை மாற்றியமைத்துள்ள நிலையில்அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கத்திற்கு எதிர்கொள்ள நேரிடும். நாடோ மக்களோ முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...