Home / உள்நாட்டு செய்திகள் / 18180 கிலோ மஞ்சளை திருடிச் சென்ற 8 பேர் கைது

18180 கிலோ மஞ்சளை திருடிச் சென்ற 8 பேர் கைது

கொழும்பு –  கிராண்பாஸில் அமைந்துள்ள, இலங்கை துறைமுகத்துக்குச் சொந்தமான இறங்குதுறையில் மீள் ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 18180 கிலோ மஞ்சள் கட்டைகளை திருடிச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஞ்சள் இறக்குமதி நாட்டுக்குள் தடைச் செய்யப்பட்டுள்ள போது, சில நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்டிருந்த குறித்த மஞ்சள் தொகை விசாரணைகளின் நிறைவில் மீள் ஏற்றமதி செய்வதற்கான கிராண்பாஸிலுள்ள இறங்குதுறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, இரு சந்தர்ப்பங்களில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லொரி, ​வேனுடன் மஞ்சள் கட்டடைகள் 20 கிலோவும், மஞ்சள் தூள் 12.5 கிலோகிராமும்,   45 112 032 ரூபாயும், மேற்படி திருட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

About VITHUSHA

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...