Home / உலகச் செய்திகள் / 157 பயணிகளுடன் பயணித்த போயிங் 737 விமானம் விபத்து!!

157 பயணிகளுடன் பயணித்த போயிங் 737 விமானம் விபத்து!!

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து 157 பேருடன் கென்யாவின் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது.

இதையடுத்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது.

விமானத்தில் 149 பயணிகள் இருந்துள்ளனர். விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்த தகவல்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: