Home / உள்நாட்டு செய்திகள் / 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் நேற்று காலை 8மணியளவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று 155ஆவது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர் நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வ மதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியாப்பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: