Home / உள்நாட்டு செய்திகள் / 142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று (22ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – பரயன்குளத்திலிருந்து சென்ற காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து வௌியேற்றப்பட்ட முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கஞ்சாவைக் கொண்டுசென்ற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...

%d bloggers like this: